Advertisement

Main Ad

6 th standrd tamil term 2 lesson 1

 

                                        ஆறாம் வகுப்பு  இரண்டாம் பருவம்

 

 


                                                         இயல் ஒன்று

 

 

1). மூதுரையின் ஆசிரியர் யார்?

      ஒளவையார்

2). மன்னனும் மாசற கற்றோனும் என தொடங்கும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

     மூதுரை

3). ஒளவையார் இயற்றிய நூல்களுள் ஒன்று ----------

     மூதுரை

4). மாசற என்னதான் பொருள் யாது?

      குறை இல்லாமல்

5). சீர்தூக்கின் என்பதன் பொருள் யாது?

     ஒப்பிட்டு ஆராய்ந்து

6). தேசம் என்பதன் பொருள் யாது?

     நாடு

7). சென்ற இடம் எல்லாம் சிறப்பு யாருக்கு?

      கற்றோருக்கு

8). மன்னன் மற்றும் கற்றோனையும் ஒப்பிட்டு பார்த்தால் யார் சிறந்தவர் என மூதுரை கூறுகிறது?

      குறை இல்லாமல் கற்றோரே சிறந்தவர்

9). ஒளவையார் இயற்றிய பிற நூல்கள் யாவை?

     ஆத்திசூடி, கொன்றைவேந்தன் , நல்வழி

10). மூதுரை என்பதன் பொருள் யாது?

        மூத்தோர் கூறும் அறிவுரை

11). மூதுரையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

        31

12). மாணவர்கள் நூல்களை------ கற்க வேண்டும்

        மாசற

13). இடமெல்லாம் =இடம் +எல்லாம்

14). மாசற=மாசு +அற

15). குற்றம் + அல்லாதவர்=குற்றமல்லாதவர்

16). சிறப்பு+உடையார்=சிறப்புடையர்

17). அழியச்செல்வம் என போற்றப்படுவது எது?

       கல்வி

18). வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமை வர

       மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்--இந்த வரிகள்

       இடம் பெற்றுள்ள நூல் எது?

        துன்பம் வெல்லும் கல்வி

19). துன்பம் வெல்லும் கல்வியின் ஆசிரியர் யார்?

       பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

20). யாருடன் சேரக்கூடாது என பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கூறுகிறார்?

       தன்மானமுள்ள கோழையுடன்

21). தூற்றும்படி என்பதன் பொருள் யாது?

       இகழும்படி

22). மூத்தோர் என்பதன் பொருள் யாது?

        பெரியோர்

23). மேதைகள் என்பதன் பொருள் யாது?

        அறிஞர்கள்

24). மாற்றார் என்பதன் பொருள் யாது?

        மற்றவர்

25). நெறி என்பதன் பொருள் யாது?

        வழி

26). வற்றாமல் என்பதன் பொருள் யாது?

        அழியாமல்

27). எளிய தமிழில் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலியுறுத்தி பாடியவர் யார்?

        பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

28). மக்கள் கவிஞர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டவர் யார்?

       பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

29). மாணவர் பிறர்-----நடக்க கூடாது?

        தூற்றும்படி

30). நாம் -----சொல்படி நடக்க வேண்டும்

        மூத்தோர்

31). கைப்பொருள்=கை +பொருள்

32). மானம்+இல்லா=மனமில்லா

33). ஏட்டில்  படித்ததோடு இருந்துவிடாதே -நீ

        ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே-இவ்வரிகள்

       நினைவூட்டும் திருக்குறள் எது?

       கற்க கசடற கற்பவை கற்றபின்

        நிற்க அதற்கு தக

34). காமராசருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் யாவை?

       பெருந்தலைவர், கருப்பு காந்தி, படிக்காத மேதை, கர்ம வீரர்,

        ஏழைபங்காளர் , தலைவர்களை உருவாக்குபவர்

35). காமராசரை கல்வி கண் திறந்தவர் என் பாராட்டியவர் யார்?

        தந்தை பெரியார்

36). காமராசர் ஏற்படுத்திய திட்டங்களில் குறிப்பிட தக்கவை எவை?

        இலவச மத்திய உணவுத்திட்டம், இலவச கட்டாயக்கல்வி, இலவச சீருடை திட்டம்

37). மதுரை பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ------ என பெயர் மாற்றம் செய்துள்ளது

       மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

38). நடுவண் அரசு காமராசருக்கு பாரத ரத்னா விருது எப்போது வழங்கியது?

       1976

39). சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு யார் பெயர் சூட்டப்பட்டு உள்ளது ?

        காமராசர்

40). காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப் பட்ட ஆண்டு?

       2.10.2000

41). காமராசரின் நினைவு இல்லங்கள் எங்கு உள்ளன?

       சென்னை நினைவு இல்லம், விருதுநகர் நினைவு இல்லம்

42). பசியின்றி=பசி+இன்றி

43). படிப்பறிவு=படிப்பு+அறிவு

44). காடு+ஆறு=காட்டாறு

45). குழந்தைகள் ஏற்ற தாழ்வின்றி படிக்க ---- அறிமுகப்படுத்தப்பட்டது

        சீருடை திட்டம்

46).  ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

         சீனா

47). ஆசியாவிலேயே மிகப்பெரிய இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

        இந்தியா,தமிழ்நாடு, (அண்ணா நூற்றாண்டு நூலகம்)

48). நூலக விதிகளை உருவாக்கியவர் யார்?

        ரா. அரங்கநாதன்

49). இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

        ரா. அரங்க நாதன்

50). கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு-----நூல்கள் உள்ளன   

        ப்ரெய்லி  நூல்கள்

51). அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மொத்தம் எதனை தளங்கள் உள்ளன?

        8

       தரை  தளம்=சொந்த நூல் படிப்பகம், ப்ரெய்லி நூல்கள்

        முதல்  தளம்=குழந்தை பிரிவு, பருவ இதழ்கள்

        2ம் தளம்=தமிழ் நூல்கள்

        3ம் தளம் =கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்

        4ம் தளம்=பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி

        5ம் தளம்=கணிதம் அறிவியல் , மருத்துவம்

        6ம் தளம்=பொறியியல்,வேளாண்மை,திரைப்பட கலை

        7ம் தளம்=வரலாறு, சுற்றுலா

        8ம் தளம்=நூலகத்தின் நிர்வாக பிரிவு

52). சிறந்த நூலகர்களுக்கு ----- விருது வழங்கப்படுகிறது

        எஸ். ஆர்.அரங்கநாதன் விருது

53). இன எழுத்துக்கள் என எவற்றை குறிப்பிடுகிறோம்?

        ஒலிக்கும் முயற்சி,பிறக்கும் இடம் இவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்

54). வல்லின மெய்களுக்கு இன எழுத்துக்கள் யாவை?

        மெல்லின எழுத்துக்கள் 6 ம்

55). இடையின எழுத்துக்கான இன எழுத்துக்கள் யாவை ?

        இடையின எழுத்து 6ம் ஒரே இனம் ஆகும்

56). உயிரெழுத்துக்களுக்கான இன எழுத்துக்களை கூறுக?

        குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும் இன எழுத்துக்கள்

57). க்கு இன எழுத்து யாது?

       

58). க்கு இன எழுத்து யாது?

       

59). ஆற்றுணா வேண்டுவது இல்.-இவரிகளின் நூல் யாது?

        பழமொழி நானூறு

60). குழந்தைகள் தினம்------

         ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்

61). மாணவர் தினம்------

        அப்துல்கலாம் பிறந்த நாள்

62). ஆசிரியர் தினம்------

        டாக்.எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்

63). தேசிய இளைஞர் தினம்-------

        விவேகானந்தர் பிறந்தநாள்

64). கல்வி வளர்ச்சி நாள்-------

       காமராசர் பிறந்த நாள்

Post a Comment

0 Comments