Advertisement

Main Ad

6 th standard tamil lesson 1

 

                                                      ஆறாம் வகுப்பு முதல் பருவம்

  

 


 

                                                                  இயல் ஒன்று

 

1). இன்பத்தமிழ் என்ற பாடலினை எழுதியவர் யார் ?

         பாரதிதாசன்

2). பாரதிதாசனின் இயற்பெயர் என்ன ?

        கனக சுப்புரத்தினம்

3). சுப்புரத்தினம் ஏன் பாரதிதாசன் என அழைக்கப்பட்டார் ?

        பாரதியாரின் கவிதையின் மீது கொண்ட பற்றின் காரணமாக

4). பாரதிதாசனின் கவிதைகளில் என்ன கருத்துக்கள் அடங்கியுள்ளன ?

        பெண்கல்வி,கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு

5). பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

        புரட்சிக்கவி , பாவேந்தர்

6). தமிழே உயிரே வணக்கம்  என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?

        கவிஞர் காசி ஆனந்தன்

7). நிருமித்த என்பதன் பொருள் யாது ?

        உருவாக்கிய

8). விளைவு என்பதன் பொருள் யாது?

        விளைச்சல்

9). சமூகம் என்பதன் பொருள் யாது ?

        மக்கள் குழு

10). அசதி என்பதன் பொருள் யாது ?

        சோர்வு

11). அமிழ்தே நீ யில்லை என்றால் ,அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் -

       இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் யார் ?

         கவிஞர் காசி ஆனந்தன்

12). தமிழ் இன்ப தமிழ் எங்கள் _______ க்கு நேர் ?

         உயிருக்கு

13).தமிழ் எங்கள் சமூகத்தின் ______ க்கு நீர் ?

        விளைவுக்கு

14). தமிழ் நல்ல புகழ் மிக்க ______ க்கு வேல் ?

         புலவர்க்கு

15). செந்தமிழுக்கு நிலவு, மணம் , அமுது என பெயரிட்டவர்  யார் ?

         பாரதிதாசன்

16). ஏற்ற தாழ்வற்ற ___ அமைய வேண்டும் ?

         சமூகம்

17). நிலவு+என்று =நிலவென்று

18).தமிழ்+எங்கள் =தமிழெங்கள்

19). செம்பயிர் = செம்மை+பயிர்

20). அமுதென்று = அமுது+என்று

21)பொருத்துக

    விளைவுக்கு -பால் =நீர்

    அறிவுக்கு--வேல் =தோள்

    இளமைக்கு -நீர்=பால்

    புலவர்க்கு-தோள் =வேல்

22). தமிழ் கும்மி என்னும் பாடலின் ஆசிரியர் யார் ?

      பாவலரேறு பெருஞ்சித்திரனார்

23). பொய்யகற்றும் உள்ளப்பூட்டறுக்கும் -- இவ்வரியில் உள்ளப்பூட்டு என்பதன்

       பொருள் யாது ?

          அறிய விரும்பாமை

24). ஊழி  என்பதன்  பொருள் யாது ?

       நீண்டதொரு காலப்பகுதி

25). ஆழிப்பெருக்கு என்பதன் பொருள் யாது ?

       கடல் கோள்

26). மேதினி என்பதன் பொருள் யாது ?

        உலகம்

27).ஊழி பல நூறு கண்டது எது ?

      தமிழ் மொழி

28). பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது ?

        மாணிக்கம்

29). பாவலரேறு என அழைக்கப்பட்டவர் யார் ?

       மாணிக்கம் என்ற பெருஞ்சித்திரனார்

30). பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை ?

        கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் ,

        பள்ளிப்பறவை

31). தென்மொழி என்னும் இதழின் ஆசிரியர் யார் ?

       பாவலரேறு பெருஞ்சித்திரனார்

32). தமிழ்ச்சிட்டு , தமிழ்நிலம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார் ?

       பெருஞ்சித்திரனார்

33). தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?

       பெருஞ்சித்திரனார்

34). தமிழ்க்கும்மி என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?

      கனிச்சாறு

35). கனிச்சாறு எத்தனை தொகுதிகளில் வெளிவந்துள்ளது ?

      எட்டு தொகுதிகள்

36).செந்தமிழ் =செம்மை+தமிழ்

37). பொய்யகற்றும் =பொய் +அகற்றும்

38).எட்டு+திசை=எட்டுத்திசை

39). பாட்டு+இருக்கும்=பாட்டிருக்கும்  

40). மனிதனை உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது எது?

       மொழி

41). உலகில் எதனை மொழிகள் உள்ளன ?

      ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள்

42). இலக்கண இலக்கிய வளம் பெற்ற மொழிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

        செம்மொழிகள்

43). யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் -

       என பாடியவர் யார் ?

       பாரதியார்

44). என்று பிறந்தவள் என உணராத இயல்பினளாம் எங்கள் தாய் - யார் கூற்று ?

       பாரதியார்

45). தமிழில் கிடைத்துள்ள மிக பழமையான நூல் எது ?

       தொல்காப்பியம்

46). தமிழில் எவ்வகை எழுத்துக்கள் அதிகம் உள்ளன?

       வலஞ்சுழி எழுத்துக்கள்

47). வலஞ்சுழி எழுத்துக்கள் = , , , ,

48). இடஞ்சுழி எழுத்துக்கள் = , ,

49). தமிழென் கிளவியும் அதனோ றற்றே =தொல்காப்பியம்

50). இமிழ்கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்=சிலப்பதிகாரம்

51). அஃறிணை =அல் +திணை

52).பாகற்காய் =பாகு+அல் +காய்

53).பூவின் ஏழு நிலைகள் யாவை?

      அரும்பு ,மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்

54). மா  என்னும் சொல்லின் வேறு பொருள் யாது?

       மரம், பெரிய, திருமகள்,விலங்கு, அழகு, அறிவு, அளவு, அழைத்தல் ,துகள்,

       மேன்மை, வால், வண்டு

55).முத்தமிழ்=இயல், இசை, நாடகம்

56).தமிழ் கவிதை வடிவங்கள்=துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்

57)தமிழ் உரைநடை வடிவங்கள் =கட்டுரை, புதினம், சிறுகதை

58). இலை =ஆல் ,அரசு, மா,பலா ,வாழை,

59). கீரை=அகத்தி , பசலை, முருங்கை

60). புல் =அருகு, கோரை

61). தாள் =நெல், வரகு

62). தழை =மல்லி

63). மடல்=சப்பாத்திக்கள்ளி, தாழை

64). தோகை=கரும்பு, நாணல்

65). ஓலை =பனை, தென்னை

66). கூந்தல்=கமுகு

67).தமிழ் பிறந்த நாள் வாழ்த்து =கவிஞர் அறிவுமதி

68). தொன்மை என்பதன் பொருள் ?

       பழமை

69)இடப்புறம்=இடது+புறம்

70). சீரிளமை=சீர்+இளமை

71). சிலப்பதிகாரம்=சிலம்பு+அதிகாரம்

72). நாம்  சிந்திக்கவும், சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ?

       மொழி

73). மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது --------     கொண்டிருக்க

       வேண்டும் ?

       வரிவடிவம்

 

74). ஐம்பூதங்களால் இவ்வுலகம் ஆனது எனக் கூறும் நூல் எது ?

       தொல்காப்பியம்

75). நிலம் தீ நீர் வளி வீசும்போடு ஐந்தும்

       கலந்த மயக்கம் உலகம் ஆதலின் -- இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

       தொல்காப்பியம்

76). நீரின் சுழற்சி பற்றி விவரிக்கும் தமிழ் நூல்கள் யாவை?

      முல்லைபாட்டு , பரிபாடல்,திருக்குறள், திருப்பாவை, கார்நாற்பது

77). கடல் நீர் முகத்த காமன்ச்சூழ் எழிலி --இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

       கார்நாற்பது

78). திரவப்பொருளை எவ்வளவு அழுத்தினாலும்   அவற்றின் அளவை சுருக்க முடியாது என்ற

       கருத்தை கூறும் பாடலை எழுதியவர் யார்?

      ஔவையார் , ஆழ அமுக்கி முகைக்கினும் ஆழ் கடல் நீர் நாழி முகவது நாள்நாழி

79). வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை கூறும் நூல் எது?

       பதிற்றுப்பத்து , நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடு

80). சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியை கூறும் நூல் எது ?

        நற்றிணை, கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்

81). கலிலியோவின் கருத்தை கூறும் நூல் எது?

       திருவள்ளுவ மாலை ,தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும்

82). திருவள்ளுவ மாலையில் தொலைக்கி தத்துவத்தை கூறியவர் யார்?

        கபிலர்

83). அப்துல்கலாம் எத்தனாவது குடியரசு தலைவர் ?

       11 வது குடியரசு தலைவர்

84). இஸ்ரோ தலைவர் யார்?

     சிவன்

85).தமிழ் இலக்கண வகைகள் எத்தனை ?

      5

86). குறில் எழுத்து ஒலிக்கும் கால அளவு யாது ?

       1 மாத்திரை

87). நெடில் ஒலிக்கும் கால அளவு யாது?

        2மாத்திரை

88). ஒற்று(மெய் எழுத்துக்கள் ) ஒலிக்கும் கால அளவு யாது?

       1/2 மாத்திரை

89). ஆயுத  எழுத்து ஒலிக்கும் கால அளவு யாது?

        1/2 மாத்திரை

90). வல்லின மெய்கள் யாவை?

        க் ,ச்,ட் ,த்,ப் ,ற்

91). மெல்லின மெய்கள் யாவை?

       ங் ,ஞ் ,ண் ,ந் ,ம் ,ன்

92). இடையின மெய்கள் யாவை ?

       ய் ,ர் ,ழ்,வ் ,ள், ல்

93). இஸ்ரோ அறிவியல் அறிஞர் யார்?

       மயில் சாமி அண்ணாதுரை

94).உலகம் என்னும் சொல் இடம் பெரும் நூல் எது?

     தொல்காப்பியம், கிளவியாக்கம்

95). செல் என்னும் சொல் இடம் பெரும் நூல் எது?

      தொல்காப்பியம்

96). மீன் என்னும் சொல் இடம் பெரும் நூல் எது?

        குறுந்தொகை

97). உயிர் என்னும் சொல் இடம் பெரும் நூல் எது?

       தொல்காப்பியம்

98). மருந்து என்னும் சொல் இடம்  பெரும் நூல் எது?

        அகநானூறு

99). மகிழ்ச்சி என்னும் சொல் இடம் பெரும் நூல் எது?

       தொல்காப்பியம், திருக்குறள்

100). அரசு என்னும் சொல் இடம் பெரும் நூல் எது?

         திருக்குறள்

Post a Comment

1 Comments