ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்
இயல் மூன்று
1). நானிலம்
படைத்தவன் - ஆசிரியர் யார் ?
முடியரசன்
2). கண்டங்கள்
சுற்றி கலமேறி வந்தவர்கள் யார்?
தமிழர்கள்
3). கல்லெடுத்து
முள்ளெடுத்து காட்டுப்பெருவெளியை
மல்லெடுத்து திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
- இவ்வரிகள் இடம் பெற்றுள்ள
பாடல் எது?
நானிலம் படைத்தவன்
4). முடியரசனின்
இயற்பெயர் என்ன?
துரைராசு
5). துரைராசு
இயற்றிய வேறு நூல்கள் யாவை?
பூங்கொடி,வீரகாவியம்,காவியப்பாவை
6). திராவிட
நாட்டின் வானம் பாடி என போற்றப்படுபவர்
யார்?
முடியரசன்
7). நானிலம்
படைத்தவன் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
எது?
புதியதொரு விதி
செய்வோம்
8). மல்லெடுத்த
என்பதன் பொருள் யாது?
வலிமைபெற்ற
9). சமர்
என்பதன் பொருள் யாது?
போர்
10). நல்கும்
என்பதன் பொருள் யாது?
தரும்
11). கழனி
என்பதன் பொருள் யாது?
வயல்
12). மறம் என்பதன்
பொருள் யாது?
வீரம்
13). எக்களிப்பு
என்பதன் பொருள் யாது?
பெருமகிழ்ச்சி
14). கலம் என்பதன்
பொருள் யாது?
கப்பல்
15). ஆழி என்பதன்
பொருள் யாது?
கடல்
16). வீரகாவியம்
என்ற நூலினை இயற்றியவர் யார்?
துரைராசு
17). கங்கை
நந்திபுரத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் -இது இவரின் வரிகள்?
பாரதியார்
18). போர்க்களத்தில்
வெளிப்படும் குணமாக முடியரசன் கூறியுள்ளதை கூறு?
வீரம்
19). கல்லெடுத்து=கல் +எடுத்து
20). நானிலம்=நான்கு+நிலம்
21). நாடு+என்ற=நாடென்ற
22). கலம்+ஏறி=கலமேறி
23). நானிலம்
படைத்தவன் இத்தலைப்பில் உள்ள நானிலம் என்ற
சொல் குறிக்கும்
நால்வகை நிலங்கள் யாவை?
குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல்
24). தமிழன்
கண்டங்களை சுற்றி வந்ததற்கான காரணமாக முடியரசன் குறிப்பிடுவது யாது?
வணிகம் செய்வதற்காக
25). கதிர்ச்சுடர்
என்பதன் பொருள் யாது?
கதிரவனின் ஒளி
26). மின்னல்
வரி என்பதன் பொருள் யாது?
மின்னல் கோடுகள்
27). அரிச்சுவடி
என்பதன் பொருள் யாது?
அகரவரிசை எழுத்துக்கள்
28). மீனவர்களுக்கு
விளக்குக்களாக அமைபவை எவை?
விண்மீன்கள்
29). மீனவர்களுக்கு
பள்ளிக்கூடம் எது?
கடல்
30). மீனவர்களுக்கு
தோழனாக விளங்குவது எது?
கடல் அலை
31). மீனவர்களுக்கு
பஞ்சுமெத்தையாக விளங்குவது எது?
வெண் மணல்
32). மீனவர்கள்
அவர்கள் காணும் கூத்தாக எதனை குறிப்பிடுகின்றனர்?
விண்ணின் இடி
33). மீனவர்கள்
விளையாடு ஊஞ்சல் என குறிப்பிட படுவது
எது?
புயல் காற்று
34). பனி
மூட்டத்தை மீனவர்கள் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் ?
போர்வையாக
35). மீனவர்கள்
மேற்கூரையாக குறிப்பிடுவது எது?
கதிரவனின் ஒளிச்சுடர்
36). மீனவர்கள்
வாழும் வீடாகவும் தங்களது செல்வமாகவும் குறிப்பிடுபவை யாவை?
கட்டுமரம்,மீன்கள்
37). மீனவர்கள்
கண்ணாடியாகவும், தங்கள் செய்யும் தவமாகவும் குறிப்பிடுபவவை யாவை?
முழு நிலவு, மூச்சடக்கி செய்யும் நீச்சல்
38). கடலும் கடல் சார்ந்த இடத்தை
என்னவென்று கூறலாம்?
நெய்தல்
39). நெய்தல்
நில மக்களின் பெயரினை குறிப்பிடுக?
பரதர் ,பரத்தியர், எயினர்,எயிற்றியர்
40). நெய்தல்
நில மக்களின் தொழில் யாது?
மீன்பிடித்தல்,உப்புவிளைவித்தல்,
41). நெய்தல்
நிலத்திற்குரிய பூ யாது?
தாழம்பூ
42). வாய்மொழி
இலக்கியம் எதனால் இப்பெயர் பெற்றது?
காதால் கேட்டு வாய்மொழியாக வழங்கப்பட்டு வருவதால்
43). கடலோடு
விளையாடு என்னும் பாடல் யார் தொகுத்த நூலில்
இடம் பெற்றுள்ளது?
சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் தொகுப்பில் உள்ளது
44). கதிர்ச்சுடர்=
கதிர்+ +சுடர்
45). மூச்சடக்கி=மூச்சு+அடக்கி
46). பெருமை+வானம்=பெருவானம்
47). அடிக்கும்+
அலை=அடிக்குமலை
48). பொருத்துக
விடிவெள்ளி-பஞ்சுமெத்தை=விளக்கு
மணல்-ஊஞ்சல்=பஞ்சுமெத்தை
புயல்-போர்வை=ஊஞ்சல்
பனிமூட்டம்-விளக்கு=போர்வை
மேகம்-குடை=குடை
49). மீனவர்கள்
தலைவன் யார்?
பெருவானம்
50). நாட்டுப்புற
பாடலை என்னவென்றும் கூறலாம்?
வாய்மொழி இலக்கியம்
51). பொருள்களை
விற்பவரை ----------என்பர்
வணிகர்
52). பொருள்களை
வாங்குவாரை --------என்பர்
நுகர்வோர்
53). பொருள்களை
கொடுத்து பொருள்களை வாங்குவதை -------என்போம்
பண்டமாற்று வணிகம்
54). நெல்லை
கொடுத்து அதற்கு பதிலாக ----ஐ பெற்றனர்
உப்பு
55). ஆட்டின்
பாலை கொடுத்து ----ஐ பெற்றனர்
தானியம்
56). வணிகத்தை
---,--- என இரண்டு வகையாக பிரிக்கலாம்
தரைவழி வணிகம்,நீர்வழி வணிகம்
57). பொருள்களை
கொண்டு செல்ல என்ன விலங்குகள் பயன்படுத்தப்பட்டன
கழுதை,குதிரை, எருது
58). வெளியூருக்கு
சென்று பொருள்களை விற்கும் வணிக குழுக்களை ------என்பர்
வணிகசாத்து
59). கப்பல்
வந்து நிற்கும் இடங்களை -----என்போம்
துறைமுகம்
60). துறைமுக
நகரங்களை -------,------
என்று கூறுவார்
பட்டினம், பாக்கம்
61). தமிழ்நாட்டின்
தலை சிறந்த துறைமுக நகரமாக எந்நகரம் விளங்கியது?
பூம்புகார்
62). தனி
நபரால் நடத்தப்படும் வணிகம்-------எனப்படுகிறது?
தனிநபர் வணிகம்
63). ஒன்றுக்கு
மேற்பட்டோர் இணைந்து நடத்தும் வணிகம் --------ஆகும்
நிறுவன வணிகம்
64). தந்நாடு
விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
...........
உமனார் போகலும் -இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
எது?
நற்றிணை
65). பாலோடு
வந்து கூழோடு பெயரும் --இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
எது:?
குறுந்தொகை
66). பொண்ணோடு
வந்து கறியொடு பெயரும்--இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
எது?
அகநானூறு
67). பெறுவணிகர்களுக்கு
----------ஓடு தொடர்பு இருப்பது அரிது
நுகர்வோரோடு
68). பழங்காலத்தில்
தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் யாது?
தேக்கு, அரிசி, சந்தானம், மயில்தோகை, இஞ்சி, மிளகு
69). சீனாவிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
கண்ணாடி,பட்டு,கற்பூரம்
70). வணிகர்களின்
நேர்மையை விளக்கும் திருக்குறளை கூறுக?
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போல் செயின்,
71). வணிகர்களின்
நேர்மையை கூறும் பட்டினப்பாலை பாடல் யாது?
நடுவு நின்ற நன்னேஞ்சினோர்
72). கொள்வது
மிகை கொளாது
கொடுப்பதும் குறைபடாது -என்ன பாடல் ?
பட்டினப்பாலை
73). சமன்செய்து
சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோருக்கு அணி ------??
திருக்குறள்
74). வீட்டு
பயன்பாட்டுக்கு பொருள் வாங்குபவர் யார்?
நுகர்வோர்
75). வணிகம்+சாத்து =வணிகச்சாத்து
76). பண்டம்+மாற்று=பண்டமாற்று
77). வண்ணப்படங்கள்=வண்ணம்+படங்கள்
78). விரிவடைந்த=விரிவு+அடைந்த'
79). சுட்டு
எழுத்துக்கள் யாவை?
அ ,இ,உ.
80). அகச்சுட்டுகளை
கூறுக?
இவன்,அவன்,இது, அது
81).சுட்டு
எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருளை
தரவில்லை எனில் அது------
அகச்சுட்டு
82). புறச்சுட்டு என்றால்
என்ன?
சுட்டு எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தந்தாள்
அவற்றை புறச்சுட்டு என்போம் ex .இம்மலை
83). இவன்,இவை, இது, இம்மரம்,
இவ்வீடு, இவற்றை-------சுட்டு என்போம்
அண்மைச்சுட்டு(அருகில் உள்ளவற்றை கூறுவது)
84). அவள்,
அது, அவை, அவ்வீடு, அம்மரம்
இவற்றை -----சுட்டு என்போம்
சேய்மை சுட்டு(தொலைவில் உள்ளவற்றை கூறுவது)
85). உ
என்னும் சுட்டு எவ்வாறு பய்னபடுகிறது?
உது ,உவன் (அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில்
உள்ளவற்றை குறிக்க பயன்படுகிறது)
86). அ
,இ என்னும் சுட்டு எழுத்துக்கள் மாற்றம் பெற்று அந்த இந்த என
வாங்கப்படுவதை -
--------என்கிறோம்
சுட்டு திரிபு
87). வினா
எழுத்துக்கள் எதனை அவை யாவை?
5, எ,யா, ஆ, ஓ,ஏ.
88). மொழியின்
முதலில் வரும் வினா எழுத்துக்கள் யாவை?
எ, யா
89). மொழியின்
இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் யாவை?
ஆ.ஓ.
90). மொழியின்
முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்துக்கள் யாவை?
ஏ
91). வினா
எழுத்துக்கள் சொல்லின் அகத்தே இருந்து பொருளை தருமானால்
அது ------ஆகும்?
அகவினா
92). சொல்லிலிருந்து
வினா எழுத்தை நீக்கினால் பொருள் தவில்லை எனில் அது ---
அகவினா (ex .எது, யார்)
93). வினா
எழுத்துக்கள் சொல்லின் புறத்தே வந்து வினைப்பொருளை தருமானால் அது----
புறவினா
94). சொல்லிலிருந்து
வினா எழுத்துக்கள் நீக்கினால் பொருள் தருமானால் அது-----
புறவினா (ex .அவனா , வருவானோ_)
95). கிடைக்கும்
பொருள்களின் மதிப்பை கூட்டி புதிய பொருளாக மாற்றுவது ---ஆகும்
மதிப்பு கூட்டுதல்
96). சிலை
செதுக்கப்பட்டு உதிரும் கல்தூளை ------ஆகா மாற்றலாம்
கோலமாவாக
97). குதிரை
எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது?
அரேபியா
98). காடும்
காடு சார்ந்த இடமும் -----ஆகும்
முல்லை
99). சிறுவணிகம்
என்றால் என்ன?
அன்றாட பொருள்களை நமக்கு எளிதில் விற்பனை செய்யும் வணிகம் சிறுவணிகம்
ஆகும்
100). பெறுவணிகம்
என்றால் என்ன?
பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி விற்பனை
செய்வது பெறுவணிகம் ஆகும்
1 Comments
மிக்க நன்றி.
ReplyDelete