Advertisement

Main Ad

6 th standard tamil term 2 lesson 2

 

                             ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்

 

 


 

                                              இயல் இரண்டு

 

 

1). ஆசாரக்கோவையின்  ஆசிரியர் யார்?

      பெருவாயில் முள்ளியார்

2). நன்றியறிதல் என்பதன் பொருள் யாது?

     பிறர் செய்த உதவியை மறவாமை

3). ஒப்புரவு  என்பதன் பொருள் யாது ?

     பிறருக்கு உதவி செய்தல்

4). நட்டல் என்பதன் பொருள் யாது ?

     நட்பு கொள்ளுதல்

5). ஆசாரக்கோவையில் கூறியுள்ள நல்ல குணங்கள் எத்தனை ?

     8

6). பெருவாயில் முள்ளியார் பிறந்த ஊர் எது?

      கயத்தூர்

7). ஆசாரக்கோவையின் பொருள் என்ன?

     நல்ல ஒழுக்கங்கள் தொகுப்பு

8). ஆசாராக்கியோவை எவ்வகை நூல்களை சேர்ந்தது?

     பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

9). ஆசாரக்கோவையில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை யாது?

     100

10). பிறரிடம் நம் -----------ஓடு பேச வேண்டும்

       இன்சொல்

11). பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்துக்கொள்வது ---- ஆகும்

        அமைதி

12). அறிவு+உடைமை=அறிவுடைமை

13). இவை+எட்டும்=இவையெட்டும்

14). நன்றியறிதல்=நன்றி + அறிதல்

15). பொறையுடைமை=பொறை +உடைமை

16). நந்தவனம் எந்தன் பொருள் யாது?

        பூஞ்சோலை

17). பார்  என்பதன் பொருள் யாது?

        உலகம்

18). பண் என்பதன் பொருள் யாது?

       இசை

19). இழைத்து என்பதன் பொருள் யாது?

       செய்து

20). முத்தேன் -கொம்புத்தேன்,கொசுந்தேன்,பொந்துத்தேன்

21). முக்கனி-மா, பலா,வாழை

22). முத்தமிழ்-இயல்,இசை,நாடகம்

23). தாலாட்டு-----இலக்கியங்களுள் ஒன்று

        வாய்மொழி இலக்கியங்கள்

24). நாவை அசைத்து பாடுவதால் ---------என்று பெயர் பெற்றது

       தாலாட்டு

25) தால்  என்பதன் பொருள் யாது?

        நாக்கு

26). எதற்காக தாலாட்டு பாடப்படுகிறது?

       குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகவும், தூங்க வைக்கவும்

27). பாட்டிசைத்து=பாட்டு +இசைத்து

28). கண்ணுறங்கு=கண்+உறங்கு

29). வாழை+இலை=வாழைஇலை

30). கை +அமர்த்தி=கையமர்த்தி

31). கதிரவனுக்கு நன்றி கூறி சிறப்பு செய்யும் விழா -------

       பொங்கல் விழா

32). உள்ளவர்கள் ------விதைப்பர், ---------அறுவடை செய்வர்

       ஆடி திங்கள், தை திங்கள்

33). பொங்கல் விழா ----- என்றும் போற்றப்படுகிறது

        தமிழர் திருநாள்

34). தை திங்கள் முதல் நாளில் அறுவடை செய்து பொங்கலிட்டு

       வழிபடுவதால் -------- என்றும் வழங்கப்படுகிறது

        அறுவடை திருநாள்

35). உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவித்து

        மகிழ்வதால் ---------- என்றும் போற்றப்படுகிறது

        உழவர் திருநாள்

36). பொங்கல் திருநாள் எத்தனை நாட்கள்  நடைபெறும்?

        இரண்டு முதல் நான்கு நாட்கள்

37). மார்கழி மாதத்தின் இறுதிநாள் ----- ஆகும்

        போகித்திருநாள்

38). போகி திருநாள் என்பது என்ன?

        பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி ஆகும்

39). தை முதல் நாள் -------ஆகும்

        பொங்கல் திருநாள்

40). பொங்கல் என்பதற்கு ------ என்று பொருள்

        பொங்கி பெருகி வருதல்

41). அக்காலத்தில் போகி என்னவாக கொண்டாடப்பட்டது?

        இந்திரவிழா

42). போகி ஏன் இந்திரவிழாவாக வழங்கப்பட்டது?

        மழைக்கடவுளை வணங்கும் நோக்கில்

43). திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது?

       தை முதல் நாள்

44). திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

        தை இரண்டாம் நாள்

45). பொங்கலுக்கு அடுத்த நாள் -----------

        மாட்டுப்பொங்கல்

46). உழவர்களின் செல்வமாக ----மதிக்கப்படுகிறது

       மாடுகள்

47). மாடு என்ற சொல்லிற்கு-----என்று பொருள்

        செல்வம்

48). மாட்டு போன்களின் நோக்கம் என்ன?

       மாடுகளுக்கு நன்றி சொல்வதற்காக

49). மஞ்சு விரட்டு என்பது என்ன?

        மாடுகளை அடக்கி தழுவும் வீர விளையாட்டு

50). மஞ்சுவிரட்டு------------என்றும் அழைக்கப்படுகிறது

        மாடுபிடித்தல்,ஜல்லிக்கட்டு,ஏறுதழுவுதல்

51). மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் -------ஆகும்

        காணும் பொங்கல்

52). திருவள்ளுவர் ஆண்டு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

       நடப்பு ஆண்டுடன் 31 கூட்டிக்கொள்ள வேண்டும்

        (2020+31=2041)

53). அறுவடை திருநாள் எந்த மாநிலத்தில் மகரசங்கராந்தி என

       அழைக்கப்படுகிறது?

       ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா,உத்திரபிரதேசம்

54). எந்த மாநிலத்தில் அறுவடை திருநாள் லோரி என அழைக்கப்படுகிறது?

        பஞ்சாப்

55). குஜராத், ராஜஸ்தான்,மாநிலங்களில் அறுவடை திருநாள் எவ்வாறு

       கொண்டாடப்படுகிறது?

        உத்தராயண்

56). கதிர் முற்றியதும் ------செய்வர்?

        அறுவடை

57). விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் ---------கட்டுவர்

        மாவிலை தோரணம்

58). பொங்கல்+அன்று=பொங்கலன்று

59). போகிப்பண்டிகை=போகி+பண்டிகை

60). பல்லவ அரசன் நரசிம்மவர்மனுக்கு எதனால்  மாமல்லன் என்ற பெயர் வந்தது?

        மற்போரில் சிறந்து விளங்கியதால்

61). இரதம் என்பதன் பொருள் யாது?

       தேர்

62). ஒரே கல்லில் இரத்த வடிவில் 5 உருவாக்கப்பட்டதால் -------எனப்பட்டது?

        பஞ்சபாண்டவர் இரதம்

63). மாமல்லன் எந்த காலத்தவர்?

      கி.பி ஏழாம்நூற்றாண்டு

64). மாமல்லரின் தந்தை பெயர் என்ன?

        மகேந்திரவர்ம பல்லவர்

65). மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களில் புடைப்பு சிற்பங்கள் யாது?

       அர்ஜுனன் தபசு

66). அர்ஜுனன் தபசு எதற்காக இவ்வாறு அழைக்கப்படுகிறது?

        அர்ஜுனன் தவம் செய்வது போல் இருந்ததால்

67). அர்ஜுனன் தபசில் உள்ள சிற்பம்----என்று அழைக்கப்படுகிறது

         பக்ரீதன் தவம்

68). சிற்பக்கலைக்கள் எதனை வகைப்படும்?

       4

69). 4 வகை சிற்பக்கலைகள் யாவை?

       குகைவரைக்கோவில்,புடைப்புச்சிற்பம்,கட்டுமானக்கோவில்,ஒற்றைக்கல்கோவில்

70). நான்குவகை சிற்பக்கலைகளும் காணப்படும் ஒரே இடம் எது?

        மாமல்லபுரம்

71). மாமல்லபுரம்  இக்காலத்தில் ------என அழைக்கப்படுகிறது?

        மஹாபலிபுரம்

72). தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலை கூடம் எது?

        மாமல்லபுரம்

73). உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை என்னவென்று

       கூறலாம்?

        மயங்கொலிகள்

74). மயங்கொலி எழுத்துக்கள் எதனை?

        8

75). மயங்கொலி எழுத்துக்கள் யாவை?

       - ,- - , - -

76). டகரத்தை அடுத்துவரும் ணகர--------

       டண்ணகரம்

77). தகரத்தை அடுத்து வரும் நகரம் ----

       தந்நகரம்

78). றகரத்தை அடுத்துவரும் னகரம் --------

       றன்னகரம்

79). நிலையான செல்வம் -----

       ஊக்கம்

80). பொருளுடைமை=பொருள்+உடைமை

81). உள்ளுவது+எல்லாம்=உள்ளுவதெல்லாம்

82). பயன்+இலா=பயனிலா

Post a Comment

0 Comments